தி.மு.க., விருப்ப மனு - விலை ரூ.52,000
லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பு வோர், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான, மார்ச் 1 முதல் விருப்ப மனுக்கள் அளிக்கும்படி, தி.மு.க., அறிவித்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:
லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் 19ம் தேதி, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்புகிற கட்சியினர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6:00 மணிக்குள், தலைமை நிலையத்தில் சேர்க்க வேண்டும்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம், 50,000 ரூபாய் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கான விலை, 2,000 ரூபாய். தலைமை நிலையத்தில் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் வசூலித்த தி.மு.க., இம்முறை 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்து இருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வாசகர் கருத்து