ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி : ஆஜ்தக் கணிப்பு
புவனேஸ்வரம்:ஒடிசா சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என ஆஜ்தக் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்து உள்ளது.
நடந்து முடிந்த பொது தேர்தலுடன் ஒடிசா மாநிலசட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பா.ஜ., 60-80 இடங்கள் வரையில் பெறக்கூடும் என தெரிவித்து உள்ளது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நவீன் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், மன்மோகன் கமால் தலைமையிலான மாநில பா.ஜ, 147 தொகுதிகளிலும் , காங்., 145 இடங்களிலும் போட்டியிட்டது.
கடந்த 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சி 112 இடங்களை பெற்றது.பா.ஜ.,23 இடங்களை பெற்று இரண்டாவது பெரிய கட்சியானது. காங்., 9 இடங்களை மட்டுமே வென்றது.
மேலும் தற்போது வெளியாகி உள்ள கருத்துகணிப்பில் பா.ஜ.,வின் வாக்கு வங்கி 42 சதவீதம் அதிகரிக்கும் வேளையில் நவீன் கட்சிக்கு 42 சதவீத வாக்கு வங்கி சரியும் என தெரிவித்து உள்ள ஆஜ்தக் காங்., வெற்றிபெறும் தொகுதி 5-8 வரையில் கிடைக்க கூடும் என கணித்து உள்ளது.
வாசகர் கருத்து