4 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் பா.ஜ., கூட்டணி

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு எதிராக பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சி களுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது.

கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நான்கு பேர் உட்பட பா.ஜ.,வின் தாமரை சின்னம், 23 தொகுதிகளில் களத்தில் உள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகள் தி.மு.க.,வுக்கு சாதமாக வருவதால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற பா.ஜ., முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014ல் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக பா.ஜ., அமைத்த கூட்டணி கன்னியாகுமரி, தர்மபுரியில் வென்றது. வேலுார், கோவையில் தி.மு.க., கூட்டணியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த முறை கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கன்னியாகுமரியில் அ.தி.மு.க.,வும், நாம் தமிழர் கட்சியும் பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளைப் பிரிப்பார்கள் என்ற நம்பிக்கையில், அங்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

இதனால் கன்னியாகுமரி, கோவை, வேலுார் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கடைசி இரு நாட்கள் அதிக கவனம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இத்தொகுதிகளில் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி, கோவை, வேலுார் தவிர முன்னாள் கவர்னர் தமிழிசை போட்டியிடும் தென்சென்னை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை ஆகிய தொகுதிகளில் அவரவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரியில் பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுவதால் பா.ம.க.,வினரும், வன்னியர் சங்கத்தினரும் கடந்த, 25 நாட்களாக தர்மபுரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பா.ம.க.,வினர் முழு கவனமும் தர்மபுரியிலேயே உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்