எதிர்க்கட்சிக்காரன் என்ன நினைப்பான்?
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை பகுதி கிராமங்களில், இம்முறை பா.ஜ., வினர் தேர்தல் பணிகளில், வழக்கத்தை விட தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் வாக்காளர்களை 'கவனிக்கும்' பணியை தி.மு.க.,வினர் துவக்கி விட்டனர்.
இதற்காக, சென்னையில் இருந்து தொகுதி பொறுப்பாளர் பூச்சி முருகன் தலைமையில், ஒரு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு, அந்நபரை, வீடு வீடாக அழைத்து செல்ல, உள்ளூர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே கிராமம் வாரியாக எடுத்த 'டேட்டா' அடிப்படையில், கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றனர்.
பணம் பட்டுவாடா உள்ளிட்ட அனைத்து பணிகளிலும், சென்னை டீம் மூக்கை நுழைப்பதால்,உள்ளூர் உடன்பிறப்புகள் அப்செட்டில் உள்ளனர்.
'நம்ம மேல நம்பிக்கை இல்லாமல், வெளியூர் காரங்களை வேலைக்கு அனுப்பியிருக்காங்க; அவங்கள கூடவே கூட்டிட்டு சுத்த சொல்றாங்க; இதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க' என, புலம்பியபடி உடன்பிறப்புகள் வேலைபார்த்து வருகின்றனர்.
வாசகர் கருத்து