முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சம் உயர்த்தப்படும் : பா.ஜ. தேர்தல் அறிக்கை வெளியீடு
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டுள்ளது.இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்.,19 ம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவீர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸின் இண்டியா கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதற்கிடையே பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று டில்லியில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா ஆகியோர் 'மோடி உத்திரவாதம்' என்ற பெயரில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் கூறியிருக்கும் முக்கிய அறிவிப்புகளின் விபரம்:
10 லட்சமாக இருந்த முத்ரா கடன் திட்டம் 20 லட்சமாக உயர்த்தப்படும்.
70வயது தாண்டிய அனைவருக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவு செய்யப்படும்.
மக்களுக்கு இலவச ரேசன் பொருள் தொடர்ந்து வழங்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும்
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
2025ம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழியை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்படும்
நடைமுறையில் உள்ள இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.
சோலார் மின்சாரம் திட்டம் நாடு ழுழுதும் கொண்டுவரப்படும்.
வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புதிதாக தொழில் துவங்கும் ஸ்டர்ட்அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
பெண்களுக்கு 1 ரூபாய் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து