தி.மு.க., பேச்சாளர்கள் எங்கே?
கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலைப் போல, இந்த முறையும், அ.தி.மு.க.,நட்சத்திர பேச்சாளர்களும், 'டிவி' விவாத பேச்சாளர்களும் களத்தில் இறங்கி விட்டனர்.
ஆனால், தி.மு.க.,வில் செய்தி தொடர்பாளர்கள், 40 பேர் மற்றும் மாநில பேச்சாளர்கள், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாமல் இருக்கின்றனர். சில செய்தி தொடர்பாளர்களும், பேச்சாளர்களும் தாங்களாகவே வலிய சென்று பிரசாரம்செய்கின்றனர்.
அவர்களை மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் மதித்து, அழைத்து பேசவும் இல்லை. தேர்தல் சம்பந்தமான பணியும் கொடுக்கவில்லை. இதனால், செய்தி தொடர்பாளர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.
கடந்த தேர்தல்களில் தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க., - பா.ஜ., வினரை கடுமையாக எதிர்த்து வாதாடி பேசினர். ஆனால், ஆளுங்கட்சியான பின், இந்த தேர்தலில் யாரும் பேசாமல் முடங்கிகிடக்கின்றனர்.
வாசகர் கருத்து