நடனமாடி அண்ணாமலைக்கு ஓட்டு சேகரித்த கலா மாஸ்டர்

கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரும், பா.ஜ., மாநில தலைவருமான அண்ணாமலைக்கு, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடனமாடி ஓட்டு சேகரித்தார்.

கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையே போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,ஆகிய மூன்று கட்சியினரும், திரைப்பட பிரபலங்களை பயன்படுத்தி, வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கின்றனர்.

பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக, பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், வடவள்ளி பகுதியில் உள்ள இந்திரா நகர், எம்.ஜி.ஆர் வீதி, கருப்பராயன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில், வீடு வீடாக சென்று, நோட்டீஸ் வினியோகித்து, அண்ணாமலைக்கு ஓட்டு சேகரித்தார்.

சினிமா பிரபலம் என்பதால், கலா மாஸ்டரை கண்ட பெண்கள், அவருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின், பி.என்.புதுார் பஸ் ஸ்டாப் பகுதியில், கலா மாஸ்டர் நடனமாடி பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஓட்டு சேகரித்தார்.


Indian - kailasapuram, இந்தியா
08-ஏப்-2024 19:08 Report Abuse
Indian ரெண்டு வோட்டு கிடைக்கும் ..
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்