தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின்

"தமிழகத்துக்கு நிவாரண நிதி கொடுக்காத மோடி, இன்னும் 4 முறை வரப் போகிறாராம். தமிழக மக்களிடம், 'இட்லி பிடிக்கும்.. பொங்கல் பிடிக்கும்' எனக் கூறினால் போதும் என நினைக்கிறார்" என, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

தி.மு.க., கூட்டணியில் கடலூர், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சமூக நீதிக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது. இந்தியாவை பாதுகாக்க இண்டியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய தேர்தல் இது. நாட்டை மத, இன, மொழி அடிப்படையில் பிரித்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்தையும் பா.ஜ., செய்தது.

'சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது' என பா.ஜ சொல்கிறது. அந்தக் கட்சிக்கு ராமதாஸ் பல்லக்கு தூக்குகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து மோடியையும் அமித்ஷாவையும் புகழ்கிறார்.

மோடி ஆட்சிக்கு மதிப்பெண் போடுமாறு கேட்டபோது, 'சைபருக்கு கீழே ஒன்றும் இல்லை. இருந்தால் அதைக் கொடுப்பேன்' என ராமதாஸ் கூறினார். அவர்களுடன் தான் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சந்தர்ப்பவாத கூட்டணி பற்றி அவரைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இண்டியா கூட்டணி அரசு, சமூகநீதி அரசாக இருக்கும். அதில் நாங்கள் நிறைவேற்றும் சாதனைகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்திருக்கிறோம். நமது திட்டங்களை மற்ற மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர். இப்போது கனடா வரை காலை உணவுத்திட்டம் சென்றுள்ளது.

தமிழகத்தில 1.15 லட்சம் மகளிர் உரிமைத் தொகை சென்றுள்ளது. இதை தங்களின் குடும்பத்துக்கு தேவையான கல்வி, மருத்துவ உதவிக்கான ஆதாரமாக பெண்கள் பார்க்கின்றனர்.

ஆனால், ஆட்சியை குறை சொல்லி ஒருவர் பேசி வருகிறார். அவர் பெயர் பச்சைப் பொய் பழனிசாமி. தன்னுடைய எஜமானருக்கு போட்டியாக அவரும் உருட்டுகிறார். அவர் சொல்லித்தான் நான் ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதாக சொல்கிறார்.

இவர் காலி செய்த கஜானாவை சீர்படுத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 'தி.மு.க., உரிமைத் தொகையை கொடுக்காது.. ஏமாற்றுவார்கள்' என்றார். இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார். 'ஒரு மனுஷன் பொய் பேசலாம்... ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது' என்ற கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

மோடி இந்தியாவை சீரழித்தார் என்றால் தமிழகத்தை பழனிசாமி சீரழித்தார். கொடநாடு கொலை. கொள்ளை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை, போதைப்பொருள்களை அனுமதித்தது என பழனிசாமி ஆட்சியில் தான் இவை அரங்கேறியது.

ஓர் அலங்கோலமான ஆட்சிக்கு அவரது ஆட்சி ஒரு உதாரணம். இதுவரை நடந்த தேர்தல்களில் தோற்றவர், இந்த தேர்தலிலும் தோற்றுப் போவார். பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என விழுந்து நடிக்கிறார். இவரது நடிப்பு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. அ.தி.மு.க., தொண்டர்கள் கூட அவரை நம்பத் தயாராக இல்லை.

தமிழகத்துக்கு நிவாரண நிதி கொடுக்காத மோடி, இன்னும் 4 முறை வரப் போகிறாராம். தமிழக மக்களிடம், 'இட்லி பிடிக்கும்.. பொங்கல் பிடிக்கும்' எனக் கூறினால் போதும் என நினைக்கிறார்.

எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தை பா.ஜ.வால் கைப்பற்ற முடியாது. தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது. தமிழகத்தின் பொற்காலம் என்பது தி.மு.க., ஆட்சியில் தான்.

தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சி. டில்லியிலும் இண்டியா கூட்டணி மூலமாக திராவிட மாடல் ஆட்சி எதிரொலிக்க வேண்டும். ஏனென்றால் பா.ஜ., வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


raja - Cotonou, பெனின்
06-ஏப்-2024 13:14 Report Abuse
raja அதனாலதான் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற ட்ரக் மாஃபியா கும்பலை தமிழன் அடித்து விரட்ட போகிறான்
Sridhar - Jakarta, இந்தோனேசியா
06-ஏப்-2024 12:56 Report Abuse
Sridhar தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவையும் சாராயத்தையும் புழங்கவிட்ட ஒரு ஆளு தயிரியமா மக்கள் முன்னால நின்னு பேசுறான் அதையும் நாலுபேரு நின்னு கேட்டுருக்கான் எப்படி, திமுக இருக்கும்வரை பாஜக எண்ணம் பலிக்காதா? அதுதான் தேர்தலுக்கு அப்புறம் திமுகாவே இருக்காதே எழுந்திருக்கிற எதிர்ப்பு அலையை பார்க்கும்போது திருட்டு கும்பல் ஒரு சீட்டுல கூட ஜெயிக்காதுங்கறது வெட்டவெளிச்சமா தெரியுது. இன்னும் பத்து நாள்ல நிலைமை படுபாதாளத்துக்கு போயி டெபாசிட் கிடைக்காத நிலைமையும் திருட்டு கும்பலுக்கு உருவாக்கலாம் ஜூன் 4 தமிழகத்துக்கு பல வெளிச்சங்களை கொடுக்கப்போகுது
Muralidharan S - Chennai, இந்தியா
06-ஏப்-2024 12:27 Report Abuse
Muralidharan S "திமுக இருக்கும் வரை" ... அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எம்ஜியார் இருக்கும் வரை திமுக எழவே முடியவில்லை. இந்த உதாருக்கு எல்லாம் பஞ்சமே இல்லை..
Rajah - Colombo, இலங்கை
06-ஏப்-2024 12:19 Report Abuse
Rajah இவ்வளவு காலமும் ஆட்சியில் இருந்தது உங்கள் ஆசியுடனா? அவர்கள் எண்ணங்கள் எப்படி பலித்தன? அப்படியானால் கடந்த பத்து வருடங்களாக திமுக இருக்கவில்லை. இனியும் இருக்காது என்று சொல்கின்றார்.
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
06-ஏப்-2024 12:00 Report Abuse
வாய்மையே வெல்லும் முதல்வரே சொல்லிட்டாரு அவருடைய ஆசைக்கு ஏற்றாற்போல் பாஜக ஆவண "வெச்சு " செய்யும் என எதிர்பார்க்கலாம்.. உங்க வீராப்பு எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பேசுங்க. செய்யிறது டகாலடி உள்ளடி வேலை பேசுவது உரிமை..
Bellie Nanja Gowder - Coimbatore, இந்தியா
06-ஏப்-2024 11:07 Report Abuse
Bellie Nanja Gowder தி மு க இருக்கும் வரை தானே . இல்லாமல் செய்து விட்டால் போயிற்று.
Bellie Nanja Gowder - Coimbatore, இந்தியா
06-ஏப்-2024 10:59 Report Abuse
Bellie Nanja Gowder irukkum varai thaane. illaamal seythu vittaal pogirathu.
sivakumar Thappali Krishnamoorthy - Dubai, ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-2024 10:53 Report Abuse
sivakumar Thappali Krishnamoorthy ஓகே.. ஒழித்து விடலாம் தி மு க வை..
angbu ganesh - chennai, இந்தியா
06-ஏப்-2024 10:51 Report Abuse
angbu ganesh இருந்தா தானே
06-ஏப்-2024 10:06 Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இந்தியாவில் ஆட்சி மாற்றம் கட்டாய தேவை.
மேலும் 12 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்