Advertisement

கோவை, நெல்லையில் 12ல் ராகுல் பிரசாரம்

கோவை, திருநெல்வேலி தொகுதிகளில், 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 12ல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க., தலைமையிலான 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வருகிறார். தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகத்திற்கு வந்து சென்று விட்டார்.

மோடியின் பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில், ராகுலை பிரசாரத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைமை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கும் 'ரோடு ேஷா' நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கிறார். பின்னர், திருநெல்வேலியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். அதில் தென் மாவட்டங்களை சேர்ந்த கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்