படுகு மொழியில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர்
கோத்தகிரி அருகே, கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் படுகு மொழியில் பேசி ஓட்டு சேகரித்தார்.
நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ள அவர், தொதநாடு சீமைக்கு உட்பட்ட, குந்தச்சப்பை, தும்மனட்டி கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
நேற்று முன்தினம் இரவு, ஒன்னதலை கிராமத்தில் பிரசாரம் செய்தார். விநாயகர் மற்றும் ஹெத்தையம்மன் கோவில்களில் காணிக்கை செலுத்தினார்.
கிராம மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ''அக்கனெல்லா, அண்ணனெல்லா ஒள்ளங்கெ இத்தீரா (அக்கா, அண்ணா நல்லா இருக்கீங்களா)' என, படுகு மொழியில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நான் வெற்றி பெற்றால், தேயிலைக்கு விலை கிடைக்கவும், படுகர் சமுதாய மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அரசிடம் பேசி தீர்வு காண்பேன்,'' என்றார்.
பின், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்னதலை - பில்லிக்கம்பை இடையே, தார் சாலை உட்பட தேவையான வசதிகள் செய்து தருவேன் என, உறுதி அளித்தார்.
வாசகர் கருத்து