சீக்ரெட் கார்னர்
வரும் ஏப்., 1ல் வழக்கு விசாரணைக்கு வருது; அன்றைக்கு அண்ணனுக்கு சாதகமா தீர்ப்பு கிடைச்சு, அண்ணன் ஜாமினில் வெளியில வந்துடுவாரு. அதுக்கு அப்புறம் பாருங்க; தமிழகத்தின் மேற்கு மாவட்ட தேர்தல் களமே கலகலக்க போகுதுன்னு கொண்டாட்டத்தில் இருக்காங்களாம்பா, நெசவு ஊரின் சூரிய கட்சிக்காரங்க.
முன்னாள் முதல்வரை எதிர்த்து நின்னு போட்டியிட்ட தனக்கு, சூரிய கட்சியில் முக்கியத்துவம் இல்லைன்னு இலை கட்சிப் பக்கம் போய் தென் மாவட்டத்தில் சீட்டும் வாங்கிட்டாரு. செலவுக்கு பணம் இல்லைன்னு, கட்சித் தலைமையை நெருங்க, வம்பே வேண்டாம்னு வேட்பாளரையே மாத்திடுச்சு இலை கட்சித் தலைமை.
'போட்டோ'வா, ஓடு
தமிழகத்து தலைநகரின் மத்திய பகுதியில் போட்டியிடும் சூரிய கட்சி பிரமுகர் வேட்பு மனு தாக்கல் செய்ய போயிருக்காரு. கூடவே, போதை கடத்தலில் சிக்கிய நபரின் நண்பரும் வர, வெளியில் தெரிந்தால் பிரச்னையாகுமே என பதறி விட்டாராம் அந்த பிரமுகர். வேட்பு மனு தாக்கலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு சிக்காமல் தள்ளி
தள்ளி நின்றாராம் பிரமுகர்.
வாசகர் கருத்து