சீக்ரெட் கார்னர்
காத்திருக்கும் கம்பீர தலைவர்
ரகசிய ஊரில் போட்டியிடும் பானை தலைவர், முழுமையாக லோக்கல் அமைச்சர் மகன் சூரியனாரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதில் துவங்கி, எந்த ஏரியாவுக்கு பிரசாரத்துக்கு செல்வது என்பது வரை, எல்லாவற்றுக்கும் சூரியனாரின் கையசைப்புக்காக காத்திருக்கிறாராம். கம்பீரமான நம்ம தலைவர் இப்படி ஒருவரின் கண் அசைவுக்காக காத்திருக்கிறாரே என,கட்சியினர் புலம்புகின்றனராம்.
மருமகனின் அரசியல் சூட்சுமம்
இலை கட்சியோடு கடைசி வரை கூட்டணி செல்வது போல போக்குக் காட்டிவிட்டு, திடுமென தாமரையோடு ஐக்கியமான அந்த காய் கட்சியின் செயல்பாடுகளுக்குப் பின்னணியில் சூரிய கட்சியின் ஆலோசகராக இருக்கும் தலைவரின் மருமகனுடைய அரசியல் சூட்சுமம் இருக்கிறதாம். குறிப்பிட்ட அந்த கட்சியை இப்படித்தான் செய்ய வேண்டும் என ஆலோசனை சொன்னதே, ரீசனான மருமகன் தானாம்.
சீட்டுக்கு சிபாரிசு செய்தேன்
மலைக்கோட்டையூரில் போட்டியிட இம்முறை வாய்ப்பிழந்த கை கட்சியின் அரச தலைவரை, பெருந்தன்மையுடன் சந்தித்துப் பேசினாராம் பெருந்தகையான தலைவர். அரசர், பெருந்தகையை நோக்கி குமுறலை வெளிப்படுத்தினாராம். இதையடுத்து, போகும் இடங்களிலெல்லாம், அரசருக்கு 'சீட்' கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்தேன்; ஆனால் தலைமைதான் விரும்பவில்லை என்று பேசுகிறாராம்.
வாசகர் கருத்து