சீக்ரெட் கார்னர்
உஷார்படுத்திய மருமகன்
மாமனார் உத்தரவின் பேரில் தென்னகத்தின் மான்செஸ்டர் ஊருக்குச் சென்ற மருமகன், கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போது, தேர்தலுக்குக் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்கள் விஷயத்தில் கவனமாக இருக்க கட்சியினரை உஷார்படுத்தினாராம். அவசர கோலத்தில் எதையும் வெளிப்படையாகச் செய்து பிரச்னையில் சிக்கினால், தலைமை காப்பாற்றாது என கறாராக சொன்னாராம் அந்த ரீசன்.
மயங்காத வேட்பாளர்
அல்வா ஊரில் பிரசாரம் சூடுபிடித்ததும், தாமரை கட்சி சார்பில் போட்டியிடும் நாகமானவரை பற்றி அநாகரிகமாக கருத்துப் பரப்பத் துவங்கி விட்டனராம். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வேட்பாளரை சொந்த கட்சியினர் பலரும் உசுப்பினராம். ஆனால், அதற்கு மயங்காத வேட்பாளர், அரசியல்னா நாலு பேர் நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க; இதை பொறுக்காதவங்க அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சிம்பிளா சொல்லிட்டாராம்.
மதிக்கும் அழகா?
பெரிய கோவில் உள்ள நகரில் போட்டியிடும் சூரிய கட்சி வேட்பாளருக்காக, முன்னாள் பம்பரம் கட்சித் தலைவர் பிரசாரத்துக்குப் போனார். போன இடத்தில் முக்கிய பிரமுகர் வராமல் தலைவரை வெகு நேரம் காக்க வைத்தாராம். இந்தத் தகவல் சூரிய கட்சித் தலைவருக்குப் போனது. உடனே, மாணிக்கத் தலைவரை அழைத்த ரஷ்யத் தலைவர், 'இதுதான் மாற்று கட்சியினரை மதிக்கும் அழகா?' என்று கேட்டு கடிந்து கொண்டாராம்.
வாசகர் கருத்து