சீக்ரெட் கார்னர்
கை கட்சியில் வேட்பாளர் அறிவிப்பு இழுத்துக் கொண்டே போவது, அக்கட்சியினருக்கு மட்டுமல்ல; கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தென் மாவட்டத் தொகுதி ஒன்றின் வேட்பாளர் அறிவிப்பை பிரசார நாள் வரை இழுக்க, கை கட்சித் தலைவரை வரவழைத்து கடிந்து கொண்டாராம் கூட்டணி தலைவர். அதன்பின்பே, வேட்பாளர் அறிவிக்கப்பட்டாராம்.
'வரமாட்டேன்...போ'
எப்போதும் முன்னணியில் நிற்கும் பூ நடிகைக்கு, தாமரை கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் கோபமான நடிகை, கட்சிக்காக பிரசாரம் செய்ய அழைப்பு விடுக்கும் வேட்பாளர்களிடம் மறுத்து வருகிறாராம். என் வருத்தம் குறைய சில நாட்களாகும். அதுவரை யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்கிறாராம்.
அப்பா சரணம்
சீமை தொகுதியில் கை கட்சி வேட்பாளருக்கு சொந்த கட்சி, கூட்டணி கட்சி என எல்லா தரப்பினரும் கடும் எதிர்ப்பாம். வேட்பாளர் என்ன முயற்சித்தும் எதிர்ப்பு குறையாததால், கட்சியின் முக்கிய தலைவரான அப்பாவிடம் எதிர் தரப்பினரை சமாதானப்படுத்தும் பணியை ஒப்படைத்து விட்டாராம். அதிருப்தியாளர்களை வரவழைத்து அப்பா பேசிக் கொண்டிருக்கிறாராம்.
வாசகர் கருத்து