சீக்ரெட் கார்னர்
துண்டு பிரசுர அலறல்
மலைக்கோட்டை ஊரில் கோலோச்சும் சூரிய கட்சி பிரமுகர், அங்கிருக்கும் பிரதான சமூகத்தைச் சேர்ந்த பலரையும் அரசியல் ரீதியில் எப்படியெல்லாம் வீழ்த்தினர் என்பதை பட்டியல் போட்டு ஊர் முழுக்க துண்டு பிரசுரம் கொடுத்து பிரசாரம் செய்கின்றனர். கூடவே, பக்கத்துக்கு தொகுதிக்கும் சென்று அதையே செய்ய, மகனுக்கு இதனால் பிரச்னை வருமோ என்று பயந்து, அந்த சமூகத்தவரை அழைத்து சமாதானம் பேசுகிறாராம்.
அன்பு மட்டும் போதும்
முத்து நகரில் போட்டியிடும் தங்கைக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு, தினமும் ஒரு முறையாவது போன் செய்கிறாராம் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் அண்ணன். கூடவே தொகுதிக்கு என்ன வேண்டும் என்றும் கேட்கிறாராம். எனக்கு எதுவும் வேண்டாம்; உங்க அன்பு இருந்தாலே போதும் என ஒவ்வொரு முறையும் தங்கை பதில் அளிக்க, நெகிழ்ந்து போயிருக்கிறாராம் அண்ணன்.
பலாப்பழம் இனிப்பு
பலாப்பழம் சின்னம் கொடுத்தாலும் கொடுத்தார்கள்; அதிகாரமிக்க பொறுப்பில் இருந்த மாஜி, தன் மகனை கேரளாவுக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான பலாப்பழத்துக்கு ஆர்டர் கொடுக்க வைத்து விட்டாராம். கேரளாவில் இருந்து தினந்தோறும் நாதபுரத்துக்கு ஆயிரக்கணக்கான பலாப்பழம் வந்து இறங்குகிறதாம். பிரசாரத்துக்குப் பயன்படுத்திய பின், தொண்டர்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனராம்.
வாசகர் கருத்து