சீக்ரெட் கார்னர்
இளையவருக்கு தலை சுற்றல்!
பிரசாரத்துக்கு போகும் இடங்களில், சூரிய கட்சியின் இளையவரை, கட்சியினரோடு ஆங்காங்கே இருக்கும் சமுதாயத் தலைவர்களும் சந்திக்கிறாங்களாம். ஓட்டுப் போடுறோம்னு சொல்லிட்டு, ஆளாளுக்கு கோரிக்கை பேப்பரை கொடுக்கிறாங்களாம். ஓ.கே.,ன்னு சொல்லி பேப்பரை வாங்கிப் படிச்சா எல்லாமே நிறைவேத்த முடியாத கோரிக்கையாம். தலைசுத்தி நிற்கிறாராம் இளையவர்.
தாத்தா டிரெயினிங்
மாம்பழத்தில் போட்டியிடும் தலைவர் குடும்பத்து பெண்மணிக்காக, பிள்ளைகளையும் ஓட்டுக் கேட்க அனுப்பி வைத்தது தாத்தா தானாம். அவர் தோட்டத்தில் இருந்து தினந்தோறும் போடும் உத்தரவை ஏற்றுத்தான், பேரப் பிள்ளைகள் அம்மாவுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு கேட்கின்றனராம். அவர்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் பேசுவதற்கும் தாத்தா தான் ட்ரெயினிங்காம்.
மகனிடம் விசாரிப்பு
தென் மாவட்ட காசியூரில் போட்டியிடும் சாமி தலைவர், இலை பக்கம் போனது மகனுக்குப் பிடிக்கவில்லையாம். இருந்தாலும், அப்பாவாச்சே என்று பொறுத்துக் கொண்டு கட்சிப் பணிகளைப் பார்க்கிறாராம். காசியூரில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும் என்று, பழைய பாசத்தில் தாமரையின் மலை தலைவர் சாமியின் மகனுக்கு போன் போட்டு பேசினாராம்.
வாசகர் கருத்து