சீக்ரெட் கார்னர்
மலைக்கோட்டை ஊரில் போட்டியிடும் தீப்பெட்டி ஆசாமியை, தினந்தோறும் காலையிலேயே தொடர்பு கொள்ளும் கர்ஜனை தந்தை, அரசியல்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்; எல்லாரையும் அனுசரித்துத்தான் போகணும். உணர்ச்சிவப்பட்டா என்னை மாதிரி தோல்வியை தான் சந்திக்கணும்னு சொல்லி வகுப்பெடுக்கிறாராம்.
அல்வா ஊரில் கை கட்சி சார்பில் போட்டியிடும் நபருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்துக் கொடுக்க, அருகில் இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பெயர் கொண்ட ஆண் அமைச்சரை அனுப்பி இருக்காங்களாம். அவர் போகும் இடங்களில் எல்லாம், தாமரை கட்சி வேட்பாளர் ஆலங்குளத்தைச் சேர்ந்த மாஜியை கொன்றவர் என்று பிரசாரம் செய்ய, அதெல்லாம் கூடாது என தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
கைக்கட்சி மாநிலத் தலைவர் பின்புலம் குறித்து, சொந்த கட்சியினரே பல இடங்களுக்கும் புகார் அனுப்பி உள்ளனராம். லண்டனில் 500 கோடிக்கு ஹோட்டல் வைத்திருக்கிறார் என்பது முதல், தி.நகரில் நடந்த ஒரு கொலை சம்பவம் வரை புகாரில் குறிப்பிட்டிருக்க, இலை கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் டி.வி.,யில் செய்தியாக்கிவிட்டனர். இது, இலை கட்சித் தலைவருக்குப் போக, டென்ஷனாகி விட்டாராம்.
வாசகர் கருத்து