சீக்ரெட் கார்னர்
ரகசிய நகரத்தில் போட்டியிடும் சிறுத்தை தலைவர், தனக்கு எதிராக போட்டியிடும் ஜாதி கட்சி பிரமுகரை வீழ்த்த, அவர் ஜாதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்கிறாராம். இத்தகவல் தெரிந்து, ஜாதி கட்சித் தலைவருக்கு எதிராக இருக்கும் தலைவர்கள் பலரும் சிறுத்தை தலைவரை தேடிச் செல்கின்றனராம்.
சீட் ரகசியம்
கப்பல் நீந்தும் ஊரில் தனக்கு சீட் கேட்டு, தலைமை வரை முட்டி மோதினாராம் கை கட்சியின் மாஜி. அதே ஊரை தனக்கு கொடுக்கணும்னு கேட்டு, இன்னொரு மாஜியின் புதல்வரான விஷ்ணுவானவர் தலைமை வரை நெருக்கடி கொடுக்க, சமீபத்திய மாஜியை அழைத்து பேசியுள்ளனர். அதன் பின்பே மாஜியின் புதல்வருக்கு சீட் ஒதுக்கினராம்.
காத்திருக்கும் நடிகை
தாமரை கட்சி தலைவருக்கு சமூக வலைதளம் வாயிலாக தொடர் நெருக்கடி கொடுத்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை, யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென இலை கட்சிக்கு பாய்ந்தார். அங்கு, பெரிய அளவில் யாரும் கண்டு கொள்ளாததால், தேர்தல் பிரசாரத்திலாவது முக்கியத்துவம் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
வாசகர் கருத்து