கணக்கு போட்ட அரசியல் கட்சிகள்: மாறி போன கிருஷ்ணகிரி தேர்தல் களம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், உத்தேச வேட்பாளர்களை கணக்கிட்டு, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்., கட்சி வேட்பாளர் மாற்றத்தால், தேர்தல் களத்தின் பாதை மாறிப்போனது.
கிருஷ்ணகிரியில், சிட்டிங் எம்.பி., யாக இருப்பவர் காங்., கட்சியின் செல்லக்குமார். செட்டியார் சமூகத்தை சேர்ந்த இவர், காங்., மேலிடத்திற்கு நெருக்கமானவர். கிருஷ்ணகிரி ரயில் திட்டத்திற்கு கடுமையாக உழைத்துஉள்ளதாக கூறி, மீண்டும் 'சீட்' கேட்டு வந்தார். கட்சியின் சில நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்தின.
கிருஷ்ணகிரியில் ஒரு வேட்பாளரை எதிர்க்க, அதே சமூகத்தை சேர்ந்தவரை மற்ற அரசியல் கட்சிகள் களமிறக்கும். அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக ஆரிய வைசிய செட்டியாரான நரசிம்மன், அ.தி.மு.க., வேட்பாளராக, நாயுடு சமூகத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் காங்., வேட்பாளராக, எதிர்பார்க்கப்பட்ட செல்லக்குமாருக்கு பதிலாக, நாயுடு சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
காங்., - பா.ஜ.,வில் செட்டியார் சமூகத்தினர் நிறுத்தப்பட்டு, மற்ற சமூகத்தினர் ஓட்டுகளை பெற மோதுவர் என்ற நிலை மாறி, தற்போது, அ.தி.மு.க., - காங்., கட்சிகளில் நாயுடு சமூகத்தினர் நிறுத்தப்பட்டு, தேர்தல் களம் வேறு திசையில் சென்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 சதவீத ஓட்டுகளை வைத்துள்ள வன்னியர்களுக்கு பெரிய கட்சிகளில், 'சீட்' வழங்காத நிலையில். எந்த வேட்பாளர், கட்சிகளை தாண்டி மற்ற சமூகத்தினரின் ஓட்டுகளை பெறுவார், யார் வெல்வார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
வாசகர் கருத்து