சீக்ரெட் காரனர்
சந்தேக பார்வை
ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் நபர், தன்னைப் பற்றியும் ஆட்சி குறித்தும் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் தகவல் வெளியாவதை அடுத்து, உடன் இருப்போர் அனைவரையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறாராம். பலரையும் கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.
டில்லியில் மன்றாட்டம்
மலை மாவட்ட ஊரில் இருக்கும் கை கட்சி பாரம்பரிய பெருமாள் நபருக்கு தொகுதி மறுக்கப்பட்டது தெரிந்ததும், முன்னாள் கட்சி நிர்வாகியும் தந்தையுமானவருடன் டில்லிக்குப் போனாராம். முன்னாள் தேசியத் தலைவரைப் பார்த்து மன்றாடி, வேறு தொகுதி வாங்கினாராம்.
தவிக்கும் 'மான்'
வீர வசனம் பேசும் விவசாயி தலைவர், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தையெல்லாம் ஓரிடத்தில் பதுக்கி இருந்தாராம். அந்த இடத்தை வருமான வரித் துறை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க, தேர்தலுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தடுமாறுகிறாராம் அந்த 'மான்' தலைவர்.
வாசகர் கருத்து