சூரியனுக்கே ஒளி தருவேன்

தென்னகத்தின் தொழில் நகரமாக இருக்கும் ஊரில், முத்தான மனிதரை பொறுப்பில் இருந்து விடுவித்து, பக்கத்தில் இருக்கும் தென்னை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். தொழில் நகருக்கு ராஜாவானவரை நியமித்து விட, அவர் சூரியனை ஒளிவீச வைப்பேன் என்று சொல்லி ஊர் முழுக்க அலைந்து கொண்டிருக்கிறாராம்.
'ஸ்விட்ச் ஆப்'
மாம்பலத்து ஊரின் சூரிய கட்சி முக்கிய பிரமுகர் லிங்கமானவருக்கு சீட் இல்லை என்றதும், காணொலி வாயிலாக கட்சித் தலைவர் நடத்திய கூட்டத்திற்கு வராமல் செல்லைச் 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டு எஸ்கேப் ஆனாராம். ஆளைத் தேடிப் பிடித்து வந்து சமாதானப்படுத்தி உள்ளனராம்.
பணம் இல்லை
கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊரில், இம்முறை நீங்கள் தான் வேட்பாளர் என, இலை கட்சித் தலைவர் தம்பியானவரிடம் சொல்ல, ஏற்கனவே டில்லி பிரதிநிதியாக இருக்கும் எனக்கு, இன்னொரு முறை செலவு செய்ய பாக்கெட்டில் பணம் இல்லை என்று சொல்லி நழுவி விட்டாராம்.
4. தாமரைக்கு ஆதரவாக கருத்து பேசும் மஞ்சள் பெயர் கொண்ட முற்போக்கு நடிகையை லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு கட்சியினர் பலரும் அழைத்தனாராம். சன்மானமாக அவர் கேட்டத் தொகையைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டனராம். ஸாரிம்மா தப்பா வந்துட்டோம் என சொல்லி ஓட்டம் பிடித்தனராம்.
வாசகர் கருத்து