பழநி தொகுதியில், தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். 2011ல் தோல்வி, 2016ல் வெற்றி. இவருக்கு பணியாற்ற திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்துார் தொகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க., நிர்வாகிகள் சென்றுள்ளனர். இதனால், அந்த தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பழநியில் முகாமிட்டுள்ள சீனியர் நிர்வாகிகளை கேட்டோம். 'தோல்வி நிச்சயம் என தெரிந்தும், அந்த தொகுதிகளில் வீணாக வேலை செய்வதைவிட, மாவட்ட செயலர் கடந்த முறை வென்ற, பழநி தொகுதியை தக்க வைப்பதில் கவனம் செலுத்துமாறு எங்களுக்கு தகவல் வந்தது' என்றனர்.
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் தோழர்களிடம் இதை சொல்லி கருத்து கேட்டோம். 'தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள், குறுநில மன்னர் போல நடப்பது நாட்டுக்கே தெரிந்த விஷயம். 'கருணாநிதியே இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார். எனவே, இதையெல்லாம் கடந்து செல்வது தான் நல்லது' என, விரக்தியுடன் கூறினர். சோறு போடுகிற இடத்திற்குதானே காக்கைகள் செல்லும். அது, தோழர்களுக்கு தெரியாதா என்ன?
வாசகர் கருத்து