தி.மு.க.,வை புறக்கணிக்க 4 கிராம மக்கள் முடிவு

சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த, அருகே உள்ள தும்பிப்பாடி, பொட்டியபுரம், கமலாபுரம், சிக்கனம்பட்டி கிராமங்களில், 571 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த உள்ளனர். இதற்கு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட நான்கு கிராம மக்கள்அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து, நான்கு கிராம மக்களின் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் நேற்று அளித்த பேட்டி:
டால்மியா மேக்னசைட் நிலத்தில், 10,000 ஏக்கர் நிலம் உள்ளது. இரும்பாலையில், 3,000 ஏக்கர் உள்ளது. அந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்தால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காது. இக்கோரிக்கையை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ஏற்று எங்களுடன் போராடியது. ஆனால் தேர்தல் அறிக்கையில் மாற்றி தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தி.மு.க.,வைபுறக்கணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து