காங்., கோட்டையில் களமிறங்கும் 'ராணி' யார்?

விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் ராணி களம்
இறக்கப்பட்டுள்ளார். தொண்டு நிறுவனத்தை துவங்கி வங்கிகள் மூலம் கடன் பெற்று
கொடுக்கும் பணியில் ஈடுபட்ட ராணி, தொண்டு நிறுவனத்தில் தலைவியாக உள்ளார்.
5,000த்துக்கும்
மேற்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வரும் அவர், கடந்த சட்டசபை
தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் சுய உதவிக் குழுக்கள் மூலம் தீவிர
பிரசாரம் செய்தார்.
இதை தொடர்ந்து, தளவாய்சுந்தரம் சிபாரிசில்
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்
தொடர்ந்து, மாநில மகளிரணி துணை செயலர் மற்றும் கட்சியின் நிர்வாகக்குழு
உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு
அ.தி.மு.க., வேட்பாளராகவும் ஆகி விட்டார்.
அவரிடம் கேட்டபோது,
'முதலில் கட்சி பொறுப்பு கொடுத்தனர். தற்போது வேட்பாளர் ஆக்கி உள்ளனர்.
என்னுடைய கடந்த கால பணிகள் என்னை கரைசேர்க்கும்' என்றார்.
வாசகர் கருத்து