ஓரிரு நாள்களில் வெற்றிக் கூட்டணி அறிவிப்பு: அண்ணாமலை
"பா.ஜ., சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் குறித்தும் கூட்டணி குறித்தும் ஓரிரு நாளில் தெரியவரும்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து அண்ணாமலை கூறியதாவது:
சென்னைக்கு கடந்தாண்டு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்த போது மக்கள் உற்சாமாக வரவேற்றனர். கோவையில் நடக்கும் ரோடு ஷோ என்பது மக்கள் தரிசன யாத்திரை.
கோவையில் முதல்முறையாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது. தமிழிசை ராஜினாமா செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும்.
லோக்சபா தேர்தலில் தமிழிசை போட்டியிட வேண்டும் என்பது தலைமை எடுத்த முடிவு. நாடு முழுதும் பிரதமர் மோடி ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழகத்தில் மட்டும் அதற்கு தடை விதித்தது எந்தவகையில் நியாயம். அதனால் தான், உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
ஜனநாயகத்தில் பிரதமரை பார்ப்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த இருக்கிறார். பிரதமர் எல்லா தொகுதிகளுக்கும் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
பா.ஜ., சார்பில் தமிழகத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் யார், கூட்டணி குறித்த முடிவுகள் ஒரிரு நாளில் தெரியவரும். அந்தவகையில், வெற்றிக் கூட்டணியை ஒரு சில தினங்களில் எதிரபார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து