4 சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்த தி.மு.க., : பின்னணி என்ன?

தி.மு.க., நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நான்கு சிட்டிங் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரேகட்டமாக ஏப்.,19ம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 30 நாள்களே இருப்பதால் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என அறிவித்தாலும் அவை எந்தெந்த தொகுதிகள் என்பதில் இழுபறி நீடித்துவந்தது. முடிவில், காங்கிரஸ் போட்டியிடக் கூடிய 10 தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரணி மற்றும் தேனியில் தி.மு.க நேரடியாக களமிறங்குகிறது.

இதுதவிர, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளில் தி.மு.க., நேரடியாக போட்டியிட உள்ளது.

தி.மு.க.,வின் சிட்டிங் எம்.பி.,க்களான கடலூர் ரமேஷ், நெல்லை ஞானதிரவியம் ஆகியோர் மீது வழக்குகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்ததால், இவ்விரு தொகுதிகளையும் காங்கிரசுக்கு தி.மு.க., ஒதுக்கியுள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க விட்டுக் கொடுத்துள்ளது. அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி., ராமலிங்கம் மீது அதிருப்திகள் நிலவியதுதான் காரணம் என கூறப்படுகிறது. முன்னதாக, திண்டுக்கல் தொகுதியை சி.பி.எம்., கட்சிக்கு தி.மு.க., ஒதுக்கியது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்