கோவையில் ரோடு ஷோ : என்.டி.ஏ.,வுக்கே ஆதரவு என மோடி உற்சாகம்

கோவையில் நடைபெறும் வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். "எந்த மாநிலமாக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக உள்ளது" என, பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதலே தமிழக சுற்றுப்பயணங்களில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், இன்று கோவையில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார்.
இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றங்களை செய்து கோவை மாநகர காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் அருகே புறப்படும் பிரதமரின் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைய உள்ளது.
இதன்பின், கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.
கோவை பயணம் குறித்து, தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
இன்று ஜக்தியால் மற்றும் ஷிவமோகாவில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்றுப் பேசுகிறேன். பின்னர், மாலையில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறேன். தெலங்கானா, கர்நாடகா அல்லது தமிழகம் என எந்த மாநிலமாக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே ஆதரவாக உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து