பா.ஜ., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு 4 இடங்கள்

பா.ஜ., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு, நான்கு தொகுதி வழங்குகின்றனர். ஈரோடு மற்றும் தஞ்சை தொகுதியை கட்டாயம் வேண்டுமென கேட்டுள்ளனர். நாமக்கல், திருநெல்வேலி அல்லது துாத்துக்குடி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை பரிசீலிக்கும்படி, ஒன்பது தொகுதிகள் கொண்ட பட்டியலை த.மா.கா., கொடுத்துள்ளது.

குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க., போட்டி



பா.ஜ., கூட்டணியில், அ.ம.மு.க., இணைந்துள்ளது. நான்கு தொகுதிகள் ஒதுக்கும்படி தினகரன் கேட்டுள்ளார். தாமரை சின்னத்தில் போட்டி என்றால் நான்கு, தனி சின்னத்தில் போட்டி என்றால் ஒரு தொகுதி என்று பா.ஜ., கூறியுள்ளது.

அதற்கு தினகரன், 'தாமரை சின்னத்தில் களம் இறங்க இயலாது. நான் கேட்கும் இரண்டு தொகுதிகளை வழங்குங்கள். எங்கள் கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவர்' என, திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்