மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி: காங்கிரசின் அடுத்த 5 வாக்குறுதிகள்
'காங்கிரஸ் ஆட்சியமைத்தால் மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்' என அக்கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீடுகளை நிறைவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, வாக்குறுதிகளை அள்ளி வீசும் பணியில் காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது.
முன்னதாக, ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் யாத்திரையில், 5 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, காலியாக உள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும். அரசுப் பணி தேர்வுத்தாள் கசிவதை தடுக்க சட்டம், தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை என இளைஞர்களை முன்வைத்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
தற்போது மகளிர் வாக்குகளை கவரும் வகையில், அடுத்த 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
என்னென்ன வாக்குறுதிகள்?
1. மத்திய அரசின் காலி பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு
2. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ,1 லட்சம் வழங்கப்படும்.
3. மத்திய அரசின் கீழ் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.
4. பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் வழக்குகளுக்கான போராட்டத்தில் உதவும் வகையில், ஒரு மண்டல அதிகாரி நியமிக்கப்படுவார்.
5. அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சமாக பணிக்கு செல்லும் மகளிருக்கு ஒரு விடுதி கட்டப்படும்.
வாசகர் கருத்து