பா.ஜ.,வுக்கு பன்னீர் 3 நிபந்தனைகள்
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கக் காத்திருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, நேற்று முன்தினம் இரவு பா.ஜ., தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்காக அழைப்பு வந்தது.
அதையடுத்து, சென்னை கிண்டி, லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்த பா.ஜ., மூத்தத் தலைவர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை சந்தித்தார் பன்னீர்செல்வம்.
பா.ஜ., தலைவர்களிடம், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. கூட்டணி வலுவாக அமைய, என் முழு ஆதர வும் உண்டு. அதோடு மூன்று கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறேன். அதை கோரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்; நிபந்தனையாகவும் ஏற்றுக் கொள்ளலாம்' என்று பன்னீர்செல்வம் சொல்லியுள்ளார்.
மூன்று நிபந்தனைகள் என்ன என பா.ஜ., தலைவர்கள் கேட்டபோது பன்னீர்செல்வம் கூறியதாவது:
தற்போதும் நானும், என் ஆதரவாளர்களும் அ.தி.மு.க.,வில் தான் இருக்கிறோம். ஆனால், அங்கு எனக்கான உரிமையை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். அதனால், பா.ஜ., கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியாது.
அப்படிப் போட்டியிட்டால், சட்டப் போராட்டத்தில் எனக்கு வலு இல்லாமல் போய்விடும். தாமரையோ, மற்ற கட்சிசின்னமோ அல்லாத ஒரு பொது சின்னத்தில், என் ஆதரவாளர்கள் போட்டியிடுவர்; அதற்கு பா.ஜ., அனுமதி அளிக்க வேண்டும்.
அடுத்ததாக, சிறையில் இருந்து வெளியே வந்தசசிகலா, பழனிசாமி அல்லாதஅ.தி.மு.க.,வினர் அனைவரையும் ஒருங் கிணைத்து, பழைய அ.தி.மு.க.,வை கட்ட மைக்க முயன்று வருகிறார். அந்த வகையில், பா.ஜ.,வுக்கு தன் ஆதரவைத் தரத் தயாராக உள்ளார்.
ஆனால், பா.ஜ., தரப்பில் இருந்து இதுவரை யாரும் சசிகலாவை தொடர்பு கொள்ளவில்லை. வருத்தத்தில் உள்ள அவரை பா.ஜ., தரப்பில் யாராவது சந்தித்து பேசி, அவரது ஆதரவையும் பா.ஜ.,கூட்டணிக்கு பெற வேண்டும்.
அதேபோல அ.ம.மு.க.,வின், ஆதரவையும் கோர வேண்டும்; இதற்காக, தினகரனை உடனடி யாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர் பா.ஜ., தலைவர்கள்.
பா.ஜ., தலைவர்களுடன் பேசும்போது, 'பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வர, நானும் களம் இறங்கட்டுமா?' எனவும் பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். 'அதெல்லாம் தேவையில்லை; பா.ஜ.,வே பார்த்துக் கொள்ளும்' என அவர்கள் கூறியுள்ளனர்.
பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்ட அடுத்த நாளே, அ.ம.மு.க., தினகரனிடம் பா.ஜ., தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை இறுதி செய்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து