சிவப்பு மாபியா தி.மு.க.,

''தமிழகத்தில், தி.மு.க., அமைச்சர்கள் பலர் ஊழலில் சிக்கி உள்ளனர். அதில் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என, பா.ஜ., அகில இந்திய துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
வேலுாரில் நேற்று நடந்த, லோக்சபா தேர்தல், பா.ஜ., பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்ட்தில் அவர் பேசியதாவது:
வருங்காலத்தில், 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் வகையில், பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் பல அமைச்சர்கள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்த காங்., கட்சி ராகுல், யாத்திரை நடத்தி வருகிறார். தி.மு.க., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதை பொருள்களை ஊக்குவித்து சிவப்பு மாபியாவாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து