வாரிசுகளை களமிறக்க தி.மு.க.,வினர் திட்டம்
கடலுார் தொகுதியில் மீண்டும் தி.மு,க., போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் அளித்து வரும் நிலையில் தொகுதியில், முக்கிய புள்ளிகள் தங்கள் வாரிசுகளை களத்தில் இறக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் மகனும் தி.மு.க., மாவட்ட பொருளாளராகவும் உள்ள கதிரவன், கடலுார் எம்.எல்,ஏ., அய்யப்பன் மகன் டாக்டர் பிரவீன், நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் மகன் இன்ஜினியர் சுமந்த் என வரிசை கட்ட துவங்கியுள்ளனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம், தன் மகன் கதிரவனை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ,. ஆக்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே முயல்கிறார். அவரது எதிர் கோஷ்டியான சபா ராஜேந்திரன், அமைச்சர் கணேசன் கூட்டணி, சுமந்தை களம் இறக்க காய் நகர்த்துகிறது.
இந்த இடைவெளியில் கடலுார் எம்.எல்,ஏ., அய்யப்பன் தன் மகன் டாக்டர் பிரவீனை களமிறக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளார். இவர்கள் பட்டதாரிகளாக இருந்தாலும், அரசியலுக்கு புதியவர்கள். வாரிசுகளிடையேயான போட்டியில் யாருக்கு 'சீட்' கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடலுார் மாவட்ட தி.மு.க.,வினரிடையே நிலவுகிறது.
வாசகர் கருத்து