Advertisement

ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன் : தி.மு.க., சொன்னது என்ன?

தி.மு.க., கூட்டணியில் வி.சி.,க்கு பொதுத்தொகுதி ஒதுக்கப்படாததால், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், வி.சி.,க்கு 2 தனித்தொகுதிகளை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலை போலவே, இந்தமுறையும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வி.சி., போட்டியிட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்தான பின், திருமாவளவன் கூறுகையில், " தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத்தொகுதியையும் கேட்டோம். பின், 2 தனித் தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி வேண்டும் என, வலியுறுத்தினோம்" என்றவரிடம்,

பொதுத்தொகுதி ஒதுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதை தி.மு.க., தலைமையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

வி.சி.,யின் பொதுத் தொகுதி வேட்பாளராக அறியப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து, அக்கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, " தி.மு.க., தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட ஆதவ் அர்ஜுனா, வி.சி., மீதான ஈர்ப்பில் கட்சிக்குள் வந்தார். திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். அதன்பின், கட்சியின் துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.

லோக்சபா தேர்தல் நெருக்கத்தில் இந்தக் காட்சிகள் நடந்ததால், வி.சி.,யின் பொதுத்தொகுதி வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா பார்க்கப்பட்டார். தி.மு.க., தலைமையோடு அவருக்கு நெருக்கம் இருப்பதால் பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதியை பெற்றுவிடலாம் என திருமாவளவனும் நினைத்தார்.

ஆனால், தொடக்கத்தில் இருந்தே தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவினர் தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டினர். '3 தனித் தொகுதி.. ஒரு பொதுத்தொகுதி' எனக் கேட்டபோது, '2019ல் என்ன கொடுக்கப்பட்டதோ அதுதான் இந்தமுறையும்' என உறுதியாக கூறிவிட்டனர்.

தொடர்ந்து இழுபறி நீடித்ததால் இன்று தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை, திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டாலின், 'அறிவாலயம் சென்று பேசிக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.

பின், நடந்த பேச்சுவார்த்தையில், 'பொதுத்தொகுதி ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை. கள்ளக்குறிச்சி தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக விழுப்புரத்தை விட்டுக் கொடுங்கள். இரண்டு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். வேறு வாய்ப்புகள் இல்லை' என தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. இதை சிட்டிங் எம்.பி., ரவிக்குமார் எதிர்பார்க்கவில்லை.

இறுதியில், சிதம்பரம், விழுப்புரம் என பழைய தொகுதிகளே முடிவானது. ஆதவ் அர்ஜுனாவுக்காக இறுதிவரையில் திருமாவளவன் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை" என்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்