கூட்டணி பேச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை : செல்வப்பெருந்தகை
''தி.மு.க.,வுடனான தேர்தல் கூட்டணி பேச்சில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஓரிரு நாள்களில் இனிப்பான செய்தி வரும்,'' என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக மாறும் என பல வாக்குறுதிகளை மோடி தந்தார். ஆனால், இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்துள்ளது.
பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களை தவிற மற்ற மாநிலங்களில் எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 2014ல் ராமேஸ்வரத்தை உலகத்தரம் வாய்ந்த கோயிலாக மாற்றுவேன் என்றார், மோடி. இதுவரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெள்ளம் பாதித்தபோது வராத மோடி வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே தமிழகம் வருகிறார். தமிழக மக்கள் இதற்கு நிச்சயம் பாடம் புகட்டுவர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும்.
தேர்தல் பங்கீடு குறித்து டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி பங்கீடு குறித்து தமிழத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருகிறது
தொகுதி பங்கீட்டிற்கு இப்போது என்ன அவசரம் வந்தது. . தி.மு.க., உடனான கூட்டணி பேச்சில் எவ்வித பிரச்னையும் ஓரிரு நாளில் இனிப்பான செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து