தமிழகத்தில் பா.ஜ.,வின் கனவு பலிக்காது: செல்லூர் ராஜூ காட்டம்
"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை வைத்து தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கிவிடலாம் என மோடி நினைக்கிறார். அவரது கணக்கு பலிக்கப் போவதில்லை" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை மக்கள் யாரும் ஏற்கவில்லை. அவர்களுடன் கூட்டணியில் எத்தனை பேர் சேர்ந்தால் என்ன. அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து கொள்ளுங்கள் என நாங்கள் யாரையும் அழைக்கவில்லை, மத்தியில் ஆளும் பா.ஜ.,வையே வேண்டாம் என சொன்னோம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் மத்தியில் மோடியும், தமிழகத்தில் ஸ்டாலினும் வாயிலேயே வடை சுடுகிறார்கள். தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் மது விற்க மாட்டோம் என சொன்னார்கள், ஆனால், இன்றைக்கு தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயரை வைத்து தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கிவிடலாம் என மோடி நினைக்கிறார். அவர்கள் கட்சியை சேர்ந்த வாஜ்பாய், அத்வானி பெயரை ஏன் கூறுவதில்லை. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழகத்தில் உருண்டு புரண்டாலும் பா.ஜ.,வின் கணக்கு பலிக்கப்போவதில்லை.
எத்தனை முறை மோடி தமிழகத்திற்கு வந்தாலும் மக்கள் பா.ஜ.,விற்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
வாசகர் கருத்து