தயார் நிலையில் 1.7 லட்சம் வாக்கு இயந்திரங்கள்: சத்யபிரதா சாஹு
தமிழகத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நாடு முழுதும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்காக 1.7 லட்சம் வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 93,000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 99,000 விவிபேட் கருவிகள் தயாராக உள்ளது. 68,154 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள நடவடிக்கை மற்றும் அவர்கள் அத்துமீறல்களில் ஈடுப்பட்டால் சிவிஜில்., செயலி வாயிலாக தெரிவிக்கலாம். புகார் செய்தவுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன் வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து