ஓட்டுக்கு வேட்டு; தி.மு.க., அப்செட்

நீலகிரி தொகுதியில், போட்டியிட விரும்பும் தி.மு.க., 'சிட்டிங்' எம்.பி., ராஜா, பிரசார வேலைகளை துவங்கிவிட்டார்.

மலை மாவட்டமான நீலகிரியில், 'மகளிருக்கான இலவச பயணம்' திட்டம் கொண்டு வந்து, மக்களை கவர திட்டமிட்டார் ராஜா. கடந்த வாரம் ஊட்டியில் இலவச பயணத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். 320 வழித்தடங்களில் உள்ள, 99 அரசு பஸ்களுக்கு மட்டும் தற்போது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்த கிராமங்களுக்கு மட்டும், அதிகளவில் பஸ்களை இயக்கியுள்ளனர். இதனால், இலவச பயண வசதி இல்லாத பஸ்களில் ஏறுவதால், கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதையடுத்து, மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கண்டக்டர்களிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

ஓட்டு வங்கியை கவர, தி.மு.க., தயாரித்த திட்டம், இப்போது சிக்கலை தந்துள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்