" சிறுபான்மையினர் நலனுக்கு பல திட்டங்கள்" - முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லார்க்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திமுக அரசு செயல்படுகிறது. பிரிவினையை தூண்டுகிறது திராவிட மாடல் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. பிறப்பில் பேதம் பார்ப்பவர்கள் திமுகவை பார்த்து பிரிவினைவாதம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கல்வி கடன்
இஸ்லாமியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு அளித்தது திமுக அரசு. திராவிட மாடல் ஆட்சி யாரையும் பிளவுபடுத்தாது. சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையை வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மத்திய அரசு நிறுத்திய கல்வி தொகையை தமிழக அரசு வழங்கும். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். சிறுபான்மையினருக்கு கால வரம்பு குறிப்பிடாமல் சான்று வழங்கப்படும். பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும்.
திராவிட மாடல்
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை பெறும் இஸ்லாமிய சிறைவாசிகளில் 11 பேரை முன் விடுதலை செய்ய கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி உள்ளோம். சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் திராவிட மாடல் அரசு முன்னோடி அரசாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்களுக்கு மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து