நெல்லை யாருக்கு? அறிவாலயத்தின் போடும் கணக்கு

நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது, திருநெல்வேலி லோக்சபா தொகுதி. இங்கு ஹிந்து, கிறிஸ்துவர்கள், நாடார், முக்குலத்தோர், பிள்ளைமார், பட்டியலினத்தவர்கள், முஸ்லிம் என அனைத்து சமூக மக்களும் வசிக்கின்றனர். அதனால் அனைத்து ஜாதி மக்களுடனும் ஒற்றுமையாக இருக்கின்ற வேட்பாளரை நிறுத்துவது வழக்கம். இந்துமறை தி.மு.க.,வில் போட்டி அதிகமாக இருப்பதால், சிட்டிங் எம்.பி., ஞானதிரவியம், கிரகாம்பெல், அஜய் பாண்டியன், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் என பல பேர் சீட் கேட்கும் முடிவில் உள்ளனர். யாருக்கு சீட்டு என்பதை படுரகசியமாக வைத்திருக்கிறதாம். தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதால், நெல்லை தொகுதியில் உதயநிதியின் குட்புக்கில் உள்ள ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
வாசகர் கருத்து