பா.ஜ,. வார்ரூமுக்கு புது ஆபீஸ்

சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலை, லோக்சபா தேர்தல் தலைமையகமாக தமிழக பா.ஜ., தேர்வு செய்துள்ளது. தேர்தல் முடியும் வரையில் அந்த மஹாலை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த இடத்தை தான், 'வார் ரூம்' போல் பயன்படுத்தி, லோக்சபா தேர்தல் பணிகளை கவனிக்கப் போகின்றனர். இந்த புது ஆபீசுக்கு சமீபத்துல சத்தமில்லாமல் கணபதி ஹோமத்தையும் நடத்தி முடித்துவிட்டனர். இந்த ஹோமத்தில் தமிழக பா.ஜ., துணை தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலர் சுமதி வெங்கடேசன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகர் என ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து