Advertisement

தமிழகம் வரும் தலைமை தேர்தல் கமிஷனர் - தலைமைச் செயலர், டி.ஜி.பி.,யுடன் ஆய்வு

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் தலைமையிலான குழுவினர், வரும் 23ம் தேதி காலை சென்னை வருகின்றனர்.

காலை 11:30 முதல் பகல் 1:00 வரை, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகின்றனர். மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 வரை, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மறுநாள் காலை 9:00 முதல் 11:00 வரை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின், பகல் 1:00 மணி வரை, வருமான வரி, சுங்கத் துறை உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பகல் 2:00 மணி முதல் மாலை 3:00 வரை, தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன்பின், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளது. மாலை 3:45 மணிக்கு டில்லி திரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்