தானும் கொடுக்காமல் மற்றவரையும் தடுக்கும் பா.ஜ.,
முக்கிய அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு செய்யும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க, வார்டு வாரியாகநிர்வாகிகளை பா.ஜ., நியமித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழக வழக்கப்படி, ஓட்டுப்பதிவுக்கு ஓரிரு நாட்கள் முன்பு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும். சமீபமாக, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையின் தொடர் நடவடிக்கையால், இந்த முறை பணப்பட்டுவாடாவை முன்கூட்டியே முடிக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இதற்காக, கட்சியில் முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகளின் வீடுகள், வேண்டிய வணிக நிறுவனங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அப்படி எந்த இடத்தில் பட்டுவாடா நடந்தாலும், உடனே பா.ஜ., மாநில தலைமைக்கும், வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க வசதியாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் வார்டு வாரியாக, தனித்தனி நிர்வாகிகள்நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தினமும் நள்ளிரவு வரை தங்கள் பகுதிகளில் பட்டுவாடா நடக்கிறதா என்று கண்காணிக்க ரோந்து செல்வர். இந்த பணிக்கு, பா.ஜ., ஆதரவாளர்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து