ரூ.60 லட்சம் மதிப்பு சேலைகள் பறிமுதல் 'ஆற்றல்' குடோனில் நடந்தது என்ன?
ஈரோடு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் 'ஆற்றல்' அசோக்குமார். இவர், கட்சியினரை பெயருக்கு வைத்துக் கொண்டு, தன் ஆட்கள் மூலமே தேர்தல் பணி செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு, 653 கோடி ரூபாய் என்பதால், மாநிலத்தில் ஸ்டார் வேட்பாளராக இவரை பார்க்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு அருகே, 24,150 சேலைகளை பதுக்கியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடும் போராட்டத்துக்கு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுபற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 26ல் தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்' புகார் 'ஆப்'பில், ஈரோடு அடுத்த காளிங்கராயன்பாளையம், அண்ணா நகர், சந்தோஷ் பில்டிங்கில், சேலைகள் பதுக்கி, வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் என புகார் வந்தது.
ேநரில் சென்ற பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிப்படி உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
கலெக்டருக்கும் தகவல் சொல்லவில்லை. பின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் தகவல் அறிந்த கலெக்டர் பறிமுதலில் ஈடுபட்ட அதிகாரிகள், போலீசாரை அழைத்து விசாரித்து, 'தேர்தல் விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முறையாக செய்யுங்கள்' என கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட பறக்கும் படையினருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அதன்பின், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக, அ.தி.மு.க., வேட்பாளர் 'ஆற்றல்' அசோக்குமார், கட்டட உரிமையாளர் ரவிசந்திரன், லாரியில் கொண்டு வந்த யுவராஜா ஆகியோர் மீது, சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பறிமுதலான சேலை ஒன்றின் மதிப்பு, 250 ரூபாய் என மதிப்பிட்டால், மொத்தம் 60 லட்சத்து, 37,500 ரூபாய் மதிப்பாகிறது. இதுபற்றி முறையான விசாரணை தொடர்ந்தால், வேட்பாளர், கட்டட உரிமையாளர் வரை பலருக்கும் சிக்கலாகும்.
இவ்வாறு கூறினர்.
உள்ளன'இதுபற்றி, 'ஆற்றல்' அசோக்குமார் கூறுகையில், ''அறக்கட்டளை மூலம், ஏழைகள், துாய்மை பணியாளர்களுக்கு வழங்க அவற்றை கடந்த, சில மாதங்களுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தேன். தேர்தல் வந்ததால், வழங்கவில்லை. இதுபற்றி தேர்தல் பிரிவில் விளக்கி விட்டேன்,'' என்றார்.'குடோனையே, 20 நாளைக்கு முன் தான் வாடகைக்கு எடுத்துள்ளீர்கள். சேலைகளும், 20 நாளுக்குள் தான் வந்ததாக கட்டட உரிமையாளர் கூறி உள்ளாரே' என கேட்டதும், ''வேறு இடத்தில் இருந்ததை, இங்கு மாற்றி உள்ளோம். இச்சேலைகளை வாங்கிய புவனா டெக்ஸ் உரிமையாளரிடம் உரிய பில், ஆவணங்கள் உள்ளன. தாக்கல் செய்வோம்,'' என்றார்.
வாசகர் கருத்து