திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தொகுதியில், 1991 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட காந்திராஜன், 67 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்தார். பின், தி.மு.க.,வில் இணைந்த காந்திராஜன், 25 ஆண்டுகளுக்கு பிறகு, இதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார்.அவருக்காக பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, '1991ல், 67 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த காந்திராஜன், இப்போது அதைவிட, இரு மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்' என்றார்.கூட்டத்தில் இருந்த ரோஷக்கார உடன் பிறப்பு, 'அப்போ அவரு தோற்கடிச்சதே நம்ம கட்சியதான். அத இப்ப சொல்லி காட்றதே தப்பு!' என்றார்.பதில் சொல்லாமல் கிளம்பிய ஐ.பி., கொஞ்சம் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் நல்லது என்று உ.பி.,க்கள் கலாய்த்தனர்.
வாசகர் கருத்து