பா.ஜ., 2வது வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா போட்டி

தமிழக பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. விருதுநகரில் ராதிகாவும் புதுச்சேரியில் நமச்சிவாயமும் களமிறங்குகின்றனர். 
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்தில்  பா.ஜ., போட்டியிடுகிறது. இதில், 9 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வேளியானது. தென்சென்னையில் தமிழிசையும் கோவையில் அண்ணாமலையும் நெல்லையில் நயினார் நாகேந்திரனும் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிட உள்ளனர். 
வேலூரில் ஏ.சி.சண்முகமும் பெரம்பலூரில் பாரிவேந்தரும் மத்திய சென்னையில் வினோஜ் செல்வமும் நீலகிரியில் எல்.முருகனும் கிருஷ்ணகிரியில் நரசிம்மனும் போட்டியிடுகின்றனர். 
இந்நிலையில், இன்று 2வது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 
விருதுநகர் - ராதிகா திருவள்ளூர் - பாலகணபதி, வடசென்னை - பால் கனகராஜ்,  திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்.  நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்.  திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்,  பொள்ளாச்சி - வசந்தராஜன்,  கரூர் - செந்தில்நாதன்,  சிதம்பரம் - கார்த்தியாயினி,  நாகப்பட்டனம் - எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சை - எம்.முருகானந்தம்  புதுச்சேரி - நமச்சிவாயம்


                  
                  
                  
                  
                  

                      
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
                      
வாசகர் கருத்து