வாக்குகளை எண்ண 45 நாள் இடைவெளி ஏன் : திருமாவளவன் கேள்வி

" தேர்தல் கமிஷனில் பல குளறுபடிகள் இருக்கின்றன. இதனால் தான் லோக்சபா தேர்தல் தேதியை தாமதாக அறிவித்தனர்" என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவன் கூறியதாவது:
இந்திய தேர்தல் கமிஷனில் பல குளறுபடிகள் இருக்கின்றன. இதனால் தான் லோக்சபா தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை தற்போது வரை இறுதி செய்யவில்லை. ஆனால் வேட்பு மனு தாக்கள் செய்ய 3 நாட்கள் மட்டுமே உள்ளன.
நாட்டில் உள்ள சில மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக நடக்கும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பில் அரசியில் தலையீடு இருப்பது போல தெரிகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும், 'ஒப்புகைச் சீட்டுகளை முழுவதுமாக எண்ணி முடித்த பின்பு தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தன.
இதனை, தேர்தல் கமிஷன் ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாட்கள் இடைவெளி இருக்கின்றது. ஏன் இவ்வளவு நாள் இடைவெளி?
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து