தே.மு.தி.க., நிபந்தனைகள் பேச்சை துண்டித்த பா.ஜ.,
ராஜ்ய சபா சீட், கூட்டணியில் அதீத முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளால், தே.மு.தி.க., உடனான கூட்டணி பேச்சை, பா.ஜ., துண்டித்து விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., உடன் அதேசமயம், தே.தி.மு.க., தரப்பில், பா.ஜ., உடனும் பேச்சு நடத்தப்பட்டது.
தே.மு.தி.க., தரப்பில் ஏழு லோக்சபா தொகுதிகள் கேட்டதுடன், ராஜ்யசபா 'சீட' உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
மூன்று தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக, பா.ஜ., தெரிவித்தது. இதை தே.மு.தி.க., தலைமை ஏற்கவில்லை.
அதோடு, அதிக தொகுதிகளை கேட்டதுடன், பா.ஜ., தரப்பில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தன் வீட்டிற்கு வந்து, தன்னை சந்தித்து பேச்சு நடத்த வேண்டும் என்பது உட்பட பல நிறைவேற்றுவதற்கு சிரமமான எதிர்பார்ப்புகளை, தே.மு.தி.க., தலைமை தெரிவித்துள்ளது.
கூட்டணி கட்சிக்கு தர வேண்டிய மரியாதையை பா.ஜ., மட்டுமே உரிய முறையில் வழங்கி வருகிறது. தே.மு.தி.க., ஓட்டு வங்கி என்ன என்பது, தமிழக கட்சிகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அதை தாண்டி தே.மு.தி.க.,வின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தது. இதனால், அக்கட்சி உடனான கூட்டணி பேச்சை, பா.ஜ., நிறுத்தி கொண்டது.
இருப்பினும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், அதற்கு விருப்பம் இருந்தால் கூட்டணிக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், பா.ஜ., தங்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்துவதாக கூறி, அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் பெற அக்கட்சி முயற்சித்து வருகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து