பிரதமரின் ரோடு ஷோ: கோவை போலீஸ் அனுமதி மறுத்தது ஏன்?
கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த வாகன பேரணிக்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மார்ச் 18ம் தேதி கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையிலான 3 கி.மீ தூரத்துக்கு ரோடு ஷோவில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று இரவு மாநகர காவல்துறையில், மாவட்ட பா.ஜ., சார்பில் கொடுக்கப்பட்டது.
கடிதம் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம், பொதுத்தேர்வு உள்ளிட்ட காரணங்களால் காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் ரோடு ஷோ நிகழ்வுக்கு அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து