Advertisement

400 இடங்களுக்கு மேல் வெற்றி: ராஜ்நாத் சிங் உறுதி

''கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் எந்த அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வரவில்லை,'' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

அசாம் மாநிலம் கோக்ராஜார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் தரமான வீடுகள் கட்டித் தரப்படும்.வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் 400 இடங்களுக்கு மேல் வெற்றி அடையும்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்கடந்த 10 ஆண்டுகளில் எந்த அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வரவில்லை.

ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ஊழல் புகார்கள் அதிகமானதை நாம் அறிவோம்.

உலக பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்த நம் நாடு, இன்று மோடியின் ஆட்சியில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வரும் 2027 ல் இந்தியா முதல் மூன்று நாடுகளில் நிச்சயம் இருக்கும். பா.ஜ., ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை. நாட்டையும் சமூதாயத்தையும் காப்பதற்காக அரசியல் செய்கிறோம். இது தான் பா.ஜ.,விற்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்