பதவிக்காக பா.ஜ.,வுக்கு வரவில்லை : சரத்குமார்
" நான் எந்த பொறுப்புக்காகவும் பா.ஜ.,வுக்கு வரவில்லை. பொறுப்பாக நடந்து கொள்ள வந்துள்ளேன்" என, நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் தமிழக பா.ஜ., பேச்சு நடத்தி வந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைப்பதாக நடிகர் சரத்குமார் அறிவித்தார்.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசின் சரத்குமாருக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இது குறித்து சரத்குமார் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பா.ஜ., தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவேன். நான் எந்த பொறுப்புக்காகவும் வரவில்லை, பொறுப்பாக நடந்து கொள்ள வந்துள்ளேன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் உறுதியாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதை நோக்கித் தான் பயணிப்பேன்.
மூன்றாம் முறை மீண்டும் பிரதமராக மோடி வரும்போது, நம் நாடு செழிக்கும். 2026ம் ஆண்டு தமிழகத்தில் இரு சக்திகள் இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து